ஈப்போ, ஆக. 7-
இம்மாதம் 2ஆம் தேதி வரையிலான நிலவரப்படி சொக்சோவின் தேசிய Neuro-Robotik, Cybernics மீட்சி மையத்தின் கட்டுமானப் பணிகள் 63.05 விழுக்காடு நிறைவு பெற்றுள்ளது.
குறிப்பாக Neuro-Robotik, Cybernics சேவையோடு இயங்கக் கூடிய வகையில் 11 முதன்மை புளோக்குகள், பாரம்பரிய மீட்சி சிகிச்சை- மருத்துவம், கட்டுமானப் பணிகள் அடுத்தாண்டு மே 1ஆம் தேதி முழுமையாக நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்தார்.
அதோடு வாழ்நாள் முழுவதும் மீட்சிக் கொள்கை அடிப்படையில் ஆக்கப்பூர்வமான திறன்மிக்க மீட்சி மருத்துவச் சேவைக்கு இங்கு கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக அமைச்சர் ஈப்போ, பண்டார் மேரு ராயாவில் எழுப்பப்படும் சொக்சோ அமைப்புக்கு சொந்தமான மீட்சி மைய கட்டுமானப் பணிகளை கடந்த வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.
இது தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய மீட்சி மையமாக உருவாகுகின்றது.