சூர்யா 44 படப்பிடிப்பின் போது சூர்யாவுக்கு காயம் – அதிர்ச்சியில் படக்குழு

சூர்யாவின் 44ஆவது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கி முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது.

சில நாட்களுக்கு முன் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜூலை 26 ஆம் தேதி முதல் ஊட்டியில் நடைப்பெற்று வருகிறது. இதில் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அவருக்கு ஏற்பட்டது சிறிதளவான காயம் தான் என மருத்துவர்கள் கூறீயுள்ளனர். அவர் இப்பொழுது நலமாக உள்ளார் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here