கோலாலம்பூர்:
தற்போது பொதுமக்களை குறிவைத்து பார்சல் மோசடி அதிகரித்துள்ளதாக வெகு ஜாக்கிரதையாக இருக்கும்படி பொது மக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பார்சல் வந்திருக்கிறது. பணம் செலுத்தி அதனை பெற்று செல்லுமாறு கூரியர் நிறுவனத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் நம்பவும் பொருட்படுத்தவும் வேண்டாம் என்று போலீஸ் நினைவுறுத்தியுள்ளது.
கூரியர் இப்படி பணம் கேட்பது இல்லை என்று புக்கிட் அமான் வர்த்தக குற்ற புலன்விசாரணை இலாகா இயக்குனர் டத்தோஸ்ரீ ரம்லி முஹமட் யூசோப் கூறினார்.
பார்சல் மோசடியில் ஆன்லைனில் பணம் செலுத்தி பார்சலை பெற்று செல்லுமாறு வரும் தொலைபேசி அழைப்பை நம்பி ஏமாற வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பணம் கைமாறியதும் சம்பந்தப்பட்ட தொலைபேசி அழைப்பும் முற்றாக துண்டிக்கப்பட்டுவிடும். பார்சலும் கிடைக்காது என்று அவர் எச்சரித்தார்.