இறைச்சி வெட்டும் கத்தியுடன் ஈப்போ ரெயில் நிலையத்தில் சுத்தித்திருந்த ஆடவர் கைது

ஈப்போ:

நேற்று மதியம் ஜாலான் டத்தோ பங்கிளிமா புக்கிட் காந்தாங்கில் KTMB ரயில் நிலையத்தில் கத்தியைக் காட்டி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த உள்ளூர் நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈப்போ காவல்துறைத் தலைவர் ACP அபாங் ஜெய்னால் அபிடின் அபாங் அமாட் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

நேற்று மதியம் 1.56 மணியளவில் அந்த இடத்தில் கத்தியை காட்டி மிரட்டிய அந்த ஆடவன், மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படுகிறது.

“வேலையில்லாத 31 வயதான சந்தேக நபருக்கு நான்கு முந்தைய குற்றவியல் பதிவுகள் மற்றும் ஒன்பது போதைப்பொருள் தொடர்பான பதிவுகள் உள்ளதாக ” அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

1958ஆம் ஆண்டு அபாயகரமான ஆயுதம் வைத்திருத்தல் சட்டத்தின் பிரிவு 6(1) கீழ் இந்த சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் யாரும் தேவையில்லாத ஆருடங்களை வெளியிட வேண்டாம் என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here