தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மூவர் மரணம்

நெல்லை:

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர்.

சிவகாசியை சேர்ந்த முருகன் என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினருடன் சேர்ந்து திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் அனைவரும் குளித்துள்ளனர்.

அப்போது குளித்துக்கொண்டிருந்த முருகனின் மகள்கள் மேனகா, சோலை ஈஸ்வரி மற்றும் அவரது உறவினர் ஒருவர் என 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here