7 -15 விழுக்காடு சம்பள உயர்வு ; மகிழ்ச்சி வெள்ளத்தில் அரசாங்க பணியாளர்கள்

கோலாலம்பூர்:

ரசாங்க பணியாளர்களுக்கான 7 முதல்15 விழுக்காடு வரையிலான சம்பள உயர்வு 2024 டிசம்பர் மாதம் தொடக்கம் அமலுக்கு வரும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.

கீழ் நிலை , மத்திய கிரேட் பணியாளர்களுக்கு முதல் கட்டமாக 8 விழுக்காடும் நிர்வாகப் பிரிவில் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு 4 விழுக்காடும் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

இரண்டாம் கட்ட சம்பள உயர்வு 2026 ஜனவரி மாதம் அமலுக்கு வரும். இந்த இரண்டு பிரிவினரும் முறையே 7 மற்றும் 3 விழுக்காடு சம்பள உயர்வை பெறுவர் என்று நிதி அமைச்சருமான அன்வார் சொன்னார்.

புத்ரா ஜெயாவில் 10 ஆயிரம் அரசாங்க பணியாளர்கள் முன்னிலையில் இந்த மகிழ்ச்சி தகவலை அறிவித்தார்.

இப்புதிய சம்பள உயர்வில் கிட்டத்தட்ட 16 லட்சம் அரசாங்க பணியாளர்கள் பயன்பெறுகின்றனர்.

அரசாங்க பணியாளர்கள் ஆகக் கடைசியாக 12 ஆண்டுகளுக்கு முன் 5.8 விழுக்காடு சம்பள உயர்வு பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here