திருமணமானதை உறுதி செய்த நடிகை சரண்யா; குவியும் வாழ்த்துகள்

சின்னத்திரை நடிகர்களுக்குப் பரிச்சயமான முகம் சரண்யா. நியூஸ் ஆங்கராகவும் வலம் வந்தார் இவர். தொடர்ந்து பல தொடர்களில் நாயகியாக நடித்தவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2’வில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் சொந்த வீடு ஒன்று கட்டியது குறித்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார்.

சரண்யா, ராகுல் என்பவரை 2020-ம் ஆண்டிலிருந்து காதலித்து வந்தார். தொடர்ந்து இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சரண்யா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இவர்களுடைய திருமண நிச்சயதார்த்த நிகழ்வும் பெரியவர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அவருக்கும் ராகுலுக்கும் திருமணமானது குறித்து வெளிப்படையாக சரண்யா அறிவிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த மாதம் ராகுலின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்து புகைப்படத்தைப் பகிர்ந்த சரண்யா, `ஹேப்பி பர்த்டே ஹஸ்பண்ட்!’ என்கிற கேப்ஷனையும் குறிப்பிட்டிருந்தார். அப்பொழுதே அவருடைய ரசிகர்கள் பலரும் `உங்களுக்குத் திருமணமாகிடுச்சா?’ எனத் தொடர்ந்து கேட்டு வந்தனர்.

நேற்று வரலட்சுமி பூஜை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சரண்யாவும் வரலட்சுமி பூஜையைக் கொண்டாடியிருக்கிறார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், `லைஃப்ல முதல் வரலட்சுமி பூஜை அவருடன்!’ என்கிற கேப்ஷனுடன் மஞ்சள் தாலியுடனும், நெற்றிக் குங்குமத்துடனும் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், அவருடைய தாலிக்கு ராகுல் குங்குமம் வைக்கும் வீடியோவையும் பகிர்ந்திருந்தார். அதன் மூலம் இவருக்கும், ராகுலுக்கும் திருமணமானதை உறுதி செய்த அவருடைய ரசிகர்கள் அவர்கள் இருவருக்கும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here