சாலை தகராறு; பெண்ணின் முகத்தில் அறைந்த ஆடவர் கைது

ஈப்போ:

தாப்பாவில் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் தெற்கு நோக்கி KM336 தூரத்தில் நடந்த சாலை தகராற்றில், ஒரு பெண்ணின் முகத்தில் குத்தியதற்காக ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் ஜூலை 31 அன்று மதியம் 2.30 மணியளவில் நிகழ்ந்ததாக தாப்பா OCPD கண்காணிப்பாளர் முகமட் நைம் அஸ்னாவி தெரிவித்தார்.

இந்த சம்பவத்தின் 1 நிமிட வீடியோவும் சமூக உட்கங்களில் வைரலாகியுள்ளது என்றார் அவர்.

அப்பெண் கோலாலம்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​அதிவேக நெடுஞ்சாலையில் வெள்ளை நிற பல்நோக்கு வாகனத்தை (MPV) முந்திச் சென்றதாகத் தெரிகிறது.

“இதில் குறித்த MPV ஓட்டுநர் மகிழ்ச்சியடையவில்லை என்றும், ஹெட்லைட்டை மீண்டும் மீண்டும் ஒளிரச் செய்து, அவர் அந்தப் பெண்ணைத் துரத்தினார் என்றும் நம்பப்படுகிறது” என்று இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

“அப்போது பெண் தனது காரை சாலையோரத்தில் நிறுத்தினார், அதே நேரத்தில் இரண்டு ஆண்களும் MPV யில் இருந்து இறங்கி அவளை அணுகினர்,” என்று அவர் கூறினார்,

“இரண்டு நபர்களில் ஒருவர் அந்த பெண்ணின் முகத்தில் குத்துவதற்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது,” என்று அவர் கூறினார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் பின்னர் தாப்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

ஆகஸ்ட் 1ம் தேதி இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்ததாக முகமட் நைம் தெரிவித்தார்.

“குறித்தக நபருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்றும், நாங்கள் இன்னும் மற்றவரைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்,” என்றும் அவர் கூறினார்,

மேலும் இந்த வழக்கு குற்றவியல் சட்ட பிரிவு 506 / 323 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here