கோலாலம்பூர்:
திருடி வந்த 17 மாடுகளை விற்று கிட்டத்தட்ட 85 ஆயிரம் ரிங்கிட் சம்பாதிப்பதற்கு திட்டமிட்டிருந்த மூன்று கடத்தல் பேர்வழிகள் அனைத்து மாடுகளையும் அப்படியே கைவிட்டுவிட்டு தலை தப்பினால் போதும் என்று தலைதெறிக்க ஓட்டமெடுத்தனர்.
சுங்கை கோலோக்கில் ஆற்றங்கரை பகுதியில் ராணுவப் படையினரை கண்ட அவர்கள் தொழுவத்தில் இருந்த 17 மாடுகளையும் அப்படியே விட்டுவிட்டு திருட்டுப் பேர்வழிகள் மூவரும் தப்பியோடினர் என்று மலேசிய காலாட்படையின் இரண்டாம் பட்டாளம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
மலேசியா – தாய்லாந்து எல்லைப் பகுதிக்கு அருகில் ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில் கடத்தி வந்த மாடுகளை தொழுவத்தில் அடைத்து வைத்திருந்தனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
நேற்று இரவு 7.30 மணியளவில் அந்த மூன்று களவானிகளும் சுங்கை கோலோக் ஆற்றில் குதித்து தாய்லாந்து நோக்கி நீந்தி சென்றனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.