கோலாலம்பூர்:
இக்கேள்விக்கு பதில் அளித்த கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி, அதிகமான எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டிராத வரை அது சாத்தியமில்லை என்றார்.
நடப்பில் அம்னோ 26 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கிறது. இவ்வளவு சிறிய எண்ணிக்கையை வைத்துக்கொண்டு பிரதமர் பதவி குறித்து கனவு காண கூடாது என்று துணைப் பிரதமருமான ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டார்.
மேலும் அம்னோவுக்கான மலாய்க்காரர்களின் ஆதரவு வெகு குறைவாக இருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
பரம வைரிகளுடன் இணைந்து அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்திருப்பதை கட்சியில் பெரும்பாலோர் இன்னமும் ஏற்றுகொள்ளவில்லை. இது இன்னொரு சிக்கல் என்று அவர் குறிப்பிட்டார்.