அமெரிக்காவில் பிறந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் முதிய பெண்ணாக கருதப்பட்ட மரியா பிரான்யாஸ் (1907-2024), தனது 117 வயதில் காலமானார். அமெரிக்காவில் பிறந்த மரியா இந்த நூற்றாண்டின் கொரோனா பெருந்தொற்று காலத்தைக் கடந்தவர். மரியா பிரான்யாஸ் இரண்டு உலகப் போர்கள், ஸ்பானிஷ் ப்ளூ உள்ளிட்டவற்றையும் தனதுகாலத்தில் பார்த்தவர் ஆவார்.
கடந்த 2 தசாப்தங்களை கட்டலோனிய முதியோர் இல்லத்தில் கழித்த இவர், 2023இல் கின்னசால் அங்கீகரிக்கப்பட்டிருந்தார். மரியா பிரான்யாசின் மறைவு தொடர்பாக அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள பதிவில், “மரியா பிரான்யாஸ் மோரேரோ வயது 117. எங்களை விட்டு பிரிந்துவிட்டார்.
அவர் கடந்த 1931ம் ஆண்டு ஜோன் மோரெட் என்பவரை மணந்தார். அவருக்கு ஒரு பெண் உள்பட மூன்று குழந்தைகள். 11 பேரக் குழந்தைகள் மற்றும் 13 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர்.பிரானியாஸ் கடந்த மார்ச் 4, 2023-ம் ஆண்டு தனது 116வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
பிரான்யாசின் மரணத்தைத் தொடர்ந்து, உலகின் மிக வயதான நபர் ஜப்பானைச் சேர்ந்த டோமிகா இடூகோ என்ற பெண்மணி ஆவார். மே 23, 1908ல் பிறந்த அவர் 116 வயதுடையவர் என்று ஜெரண்டாலஜி ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.