ஷா ஆலம்: ஜெஞ்சரோமில் உள்ள ஒரு தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) செம்பனை அரைக்கும் இயந்திரத்தில் விழுந்து 34 வயது நபர் உயிரிழந்தார். இரவு 9.15 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு எச்சரிக்கப்பட்டதாக கோல லங்காட் OCPD துணைத் தலைவர் அஹ்மத் ரித்வான் முகமட் நோர் @ சலே கூறினார்.
தொழிற்சாலை மேலாளரின் கூற்றுப்படி, உயிரிழந்தவர் பணிக்கு சேர்ந்து எட்டு நாட்கள் மட்டுமே ஆவதாக அறியப்படுகிறது. மதியம் 1 மணி உணவு நேரம் முடிந்து மீண்டும் வேலையை தொடங்கியதாக நம்பப்படுகிறது. சக ஊழியர்கள் மதியம் 2.30 மணியளவில் உணவு நேரம் முடிந்து திரும்பி வந்தபோது உயிரிழந்தவரை காணவில்லை என்பதோடு இயந்திரம் கவனிப்பார் இல்லாலம் இயங்குவதைக் கண்டறிந்தனர் என்று அவர் புதன்கிழமை (ஆக. 21) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் சகாக்கள் நடத்திய தேடுதலில், மாலை 5.57 மணியளவில் கன்வேயர் பெல்ட்டின் முடிவில், உயிரிழந்தவருக்கு சொந்தமானது என்று நம்பப்படும் ஷூ, ஆடைத் துண்டுகள் மற்றும் மனித எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அஹ்மத் ரித்வான் கூறினார். இந்தச் சம்பவத்தில் குற்றவியல் கூறுகள் எதுவும் இல்லை என்றும் போலீசார் இந்த வழக்கை திடீர் மரணம் என்று வகைப்படுத்தியுள்ளனர் என்று அவர் கூறினார்.