வீட்டை சுற்றியோ, அல்லது விளையாடும் இடங்களிலோ எதிர்பாராதவிதமாக பாம்பு கடித்து குழந்தைகள், சிறுவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. ஆனால் குழந்தை கடித்ததில் பாம்பு ஒன்று உயிரிழந்த சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது. ஆம்.. விளையாட்டு பொம்மை என நினைத்து ஒரு வயது குழந்தை பாம்பைக் கடித்த சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது.
பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஜாமுகர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு சிறிய வகை பாம்பு பாம்பு ஒன்று வந்துள்ளது. பாம்பை கண்ட அந்த குழந்தை. விளையாட்டுப் பொருள் என்று கருதி கையில் பிடித்து வாயில் வைத்து கடித்துள்ளது.
குழந்தை தனது வாயில் பாம்பை வைத்து கடித்துக் கொண்டிருப்பதை பார்த்து தாய் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக குழந்தையிடம் இருந்து பாம்பைப் பிடுங்கி வீசிவிட்டு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
குழந்தை கடித்ததால் காயமடைந்த அந்த பாம்பு உயிரிழந்துள்ளது. விஷத்தன்மை இல்லாத பாம்பை கடித்ததால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. குழந்தை கடித்ததால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. குழந்தை கடித்ததில் பாம்பு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகி வருகிறது.