ஜோகூர் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட இரண்டு நாள் நடவடிக்கை: 49 சட்டவிரோத குடியேறிகள் கைது

ஜோகூர்:

ஜோகூர் பாரு மாவட்டத்தில் ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 20 வரை பல பகுதிகளில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் மொத்தம் 49 சட்டவிரோத குடியேறிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Ops Selera, Ops Belanja, Ops Minyak, Ops Dandan, Ops Kutip மற்றும் Ops Sapu ஆகிய குறியீட்டு பெயர் கொண்ட நடவடிக்கைகளின் போது அவர்கள் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர் என்று, ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் தரஸ் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பொதுமக்களின் புகார்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், கைது செய்யப்பட்டவர்கள் அனுமதியின்றி பணிபுரிவது மற்றும் சரியான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல குற்றங்களைச் செய்திருப்பதாக அவர் கூறினார்.

இந்த நடவடிக்கையின் போது 87 வெளிநாட்டவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் சோதனை செய்யப்பட்டதாக முகமட் ருஸ்டி கூறினார்.

கைது செய்யப்பட்ட 49 வெளிநாட்டவர்கள் இந்தோனேசியர்கள் (10 பெண்கள் மற்றும் 16 ஆண்கள்), இந்தியாவைச் சேர்ந்த 8 ஆண்கள், 6 வங்கதேச ஆண்கள், ஐந்து பாகிஸ்தானிய ஆண்கள், ஒரு பிலிப்பைன்ஸ் ஆண், ஒரு பெண் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் மியன்மாரைச் சேர்ந்த ஒரு பெண் ஆகியோர் அடங்குவர் என்றும், இவர்ஜல் அனைவரும் 19 வயது முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் கூறினார்.

குறித்த சட்ட விரோதமாக குடியேறிகள் குடியேற்றச் சட்டம் 1959/63 (சட்டம் 155) குடிநுழைவு விதிமுறைகள் 1963, பிரிவு 6(1)(c) 1959/63 (சட்டம் 155) மற்றும் பிரிவு 15(1)(c) இன் விதிமுறைகள் 39(b) ஆகியவற்றின் கீழ் குற்றங்களைச் செய்துள்ளதாக முகமட் ருஸ்டி கூறினார்.

“மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் வருகையை ஒழிக்க, ஜோகூரில் உள்ள பிற அமலாக்க நிறுவனங்களுடன் நாங்கள் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here