குவா முசாங்: நெங்கிரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, இனம், மதம், மற்றும் ராயல்டி (3R) தொடர்பான பிரச்சனையை குறித்து அவரது சமீபத்திய பேச்சு தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள, முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 27) காலை குவா முசாங் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர், 8.43 மணிக்கு நீதிமன்ற வளாகத்திற்கு வந்தார். பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் மற்றும் தகவல் தலைவர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி உட்பட பல உயர் PN தலைவர்களுடன் வந்தார். நீதிபதி நிக் முகமட் டார்மிசி நிக் முகமட் சுக்ரி முன் காலை 9 மணிக்கு விசாரணை தொடங்கியதாக கூட்டரசு நீதிமன்றத்தின் இ-ஃபைலிங் அமைப்பு காட்டுகிறது.
நேற்று, குவா முசாங் அமர்வு நீதிமன்றத்தில் தேச துரோகச் சட்டம் 1948ன் பிரிவு 4(1)ன் கீழ் முஹிடி மீது வழக்குப்பதிவு செய்ய அட்டர்னி ஜெனரல் அறை (ஏஜிசி) உத்தரவிட்டதாக போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் உறுதிப்படுத்தினார்.
சமீபத்தில், 16 ஆவது மாமன்னர் பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கியதாக முஹிடின் பேச்சு சமூக ஊடகங்களில் வைரலானது.