முன்னாடியே செத்துட்டாங்கன்னா.. கொன்றது யார்? கொல்கத்தா பலாத்காரம்

கொல்கத்தா: கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சமபவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய் நேற்று பாலிகிராப் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த பாலிகிராப் சோதனை பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

வழக்கில் அதிரடி திருப்பங்களை இந்த சோதனை எழுப்பி உள்ளது. வழக்கில் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் இந்த சோதனை மாற்றிப்போட்டு உள்ளது. நேற்று நடந்த இந்த சோதனையில், நான் அறைக்கு செல்லும் போதே அந்த பெண் உயிரோடு இல்லை.. பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே இறந்து கிடந்தாள்.. நான் உள்ளே சென்ற போதே அந்த பெண் இறந்துவிட்டதாக உண்மை கண்டறிதல் சோதனையில் கூறியதாக கூறப்படுகிறது.

சிபிஐ பல ஆதாரங்களுடன் அவரை விசாரணை செய்தது. அதே சமயம் சம்பவம் நடத்த நேரத்தில் தான் வேறு இடத்தில் இருந்ததற்கான ஆதாரங்களையும் சஞ்சய் ராய் வெளியிட்டு இருக்கிறார். அந்த பெண்ணின் இறந்த உடலை பார்த்தேன். இதனால் பயத்தில் வளாகத்தை விட்டு ஓடிவிட்டதாக சஞ்சய் ராய் வாக்குமூலத்தில் கூறினார். ஏற்கனவே நான் கொலை செய்யவில்லை. என்னை ஏமாற்றி கைது செய்துவிட்டனர். எனக்கும் கொலைக்கும் தொடர்பு இல்லை என்று பேட்டி அளித்துள்ளார்.

10 சந்தேகங்கள்: இந்த பாலிகிராப் சோதனை பல கேள்விகளை எழுப்பி உள்ளது. 5 முக்கியமான சந்தேகங்களை இந்த பாலிகிராப் சோதனை எழுப்பி உள்ளது.

1. முதலில் கொலையை சஞ்சய் ராய் ஒப்புக்கொண்டதாக.. கொல்கத்தா போலீஸ் கூறியது ஏன்? அப்போது கொல்கத்தா போலீஸ் பொய் கூறியதா?

2. பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே இறந்து கிடந்தாள்.. நான் உள்ளே சென்ற போதே அந்த பெண் இறந்துவிட்டதாக உண்மை கண்டறிதல் சோதனையில் சஞ்சய் ராய் கூறி உள்ளார். அப்படி என்றால்.. அந்த கொலையை செய்தது யார்?

3. அந்த பெண்ணின் இறந்த உடலை பார்த்தேன்.. இதனால் பயத்தில் வளாகத்தை விட்டு ஓடிவிட்டதாக சஞ்சய் ராய் வாக்குமூலத்தில் கூறினார். தன்னை யாரோ சிக்க வைத்துள்ளதாக கூறியுள்ளார்.அப்படி என்றால் யார் அதை செய்தது?

4. சஞ்சய் ராய் அங்கே போகவில்லை என்றால்.. ஹெட்செட் அங்கே வந்தது எப்படி?

5. பொய் கண்டறிதல் சோதனை பல தவறான மற்றும் நம்பமுடியாத பதில்களை அந்த நபர் அளித்ததாக கூறப்படுகிறது. பொய்-கண்டறிதல் சோதனையின் போது சஞ்சய் ராய் பதற்றமாகவும் கவலையுடனும் காணப்பட்டார் என்று கூறப்பட்டு உள்ளது. இதனால் அதை நம்ப முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொலை பின்னணி: கொல்கத்தாவில் மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 33 வயதான சஞ்சோய் ராய் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராயின் கடந்தகால நடத்தை, முந்தைய திருமண வாழ்க்கையில் மனைவியை கொடுமை செய்தது மற்றும் ஆபாச வீடியோக்கள் பார்த்தது ஆகியவை அவருக்கு மனநல ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்கிறார்கள்.

இவர் அங்கே தன்னார்வலராக போலீஸார் உடன் இணைந்து செயல்பட்டு உள்ளார். இவர் வெறும் தன்னார்வலர்தான். ஆனால் போலீஸ் குழுக்களில் இருக்கிறார், அங்கே கிடைத்த காண்டாக்ட் மூலம் போலீஸ் கமிட்டி ஒன்றிலும் கூட கமிட்டி உறுப்பினராக இருக்கிறார்.

கிழிந்த புளூடூத் இயர்போன் உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். இவர் அந்த பளூடூத் ஹெட் செட் உடன் அங்கே சுற்றியதை பலரும் பார்த்து உள்ளனர். இதன் மூலமே அவர் சிக்கி உள்ளார். மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுடனான தொடர்பு காரணமாக ராய் பல்வேறு மருத்துவமனை துறைகளுக்கு சென்று பல்வேறு பணிகளை செய்துள்ளார். இது போன்ற ஒரு வாய்ப்பிற்காக அவர் இத்தனை காலம் காத்து இருந்ததாக கூறப்படுகிறது.

கொல்கத்தாவில் மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற நபர், முன்னதாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு இருந்தார். அதோடு அதிர்ச்சி தரும் வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here