பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் 6 ஆண்டுகள் காதலித்து, 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது தீபிகா படுகோன் கர்ப்பமாக இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் தீபிகாவும் அவரது கணவர் ரன்வீர் சிங்கும் இது குறித்து முறைப்படி அறிவித்தனர். தீபிகா படுகோன் கர்ப்பத்துடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
தற்போது முழு ஓய்வில் இருக்கும் தீபிகா படுகோன் பிரசவத்திற்கு பிறகு மார்ச் வரை குழந்தையை கவனித்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். மார்ச் மாதத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ், கமலஹாசன், அமிதாப்பச்சன் நடிக்கும் கல்கி படத்தில் நடிக்க தீபிகா படுகோன் திட்டமிட்டு இருக்கிறார்.
தீபிகா படுகோன் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டு இருந்த சோசியல் மீடியா பதிவில், “நானும், ரன்வீரும் குழந்தையை அதிகம் விரும்புகிறோம். குழந்தையுடன் குடும்பத்தை தொடங்கும் நாளை நாங்கள் எதிர்பார்த்திருக்கி றோம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.