கோலாலம்பூர்:
கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியா நில அமிழ்வில் மண்ணோடு புதைந்த இந்தியப் பிரஜை 48 வயது ஜி.விஜயலட்சுமியைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்தார் துயரம் கணக்கும் இதயத்தைச் சுமந்து தாயகம் திரும்பினர்.
விஜயலட்சுமியின் கணவர், மகன் சூர்யா, அவரது சகோதரி ஆகியோர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்தூ நேற்று இரவு சொந்த ஊருக்குத் திரும்பி விட்டனர் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்டு மாதம் 23ஆம் தேதி விஜயலட்சுமி மண்ணுள் புதைந்த பகுதிக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்து முறைப்படி விளக்கேற்றி இறுதி பிரார்த்தனைக்காக சிறு வழிபாட்டை முடித்துக் கொண்ட அவரது குடும்பத்தார், அங்கிருந்து ஒரு பிடி மண்ணை விஜயலட்சுமியின் நினைவாக கையோடு எடுத்துச் சென்றனர்.