சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படை நடத்திய என்கவுண்டரில் 9 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மற்றும் பீஜப்பூர் மாவட்ட எல்லையில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினர் மீதுதுப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 9 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் பெண்கள்.

மேலும் தப்பியோடியவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 153 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here