பேரப்பிள்ளைகளுக்காக தாத்தா செய்த செயல்: குவியும் பாராட்டுகள்

கோலாலம்பூர்: ஒரு தாத்தா தனது கொல்லைப்புறத்தில் DIY ரயில்பாதையை உருவாக்கி பலரது மனதை கொள்ளையடித்துள்ளார். அற்புதமான தாத்தா, பேரக்குழந்தைகளின் மனதை எப்படி வெல்வது என்று அவருக்குத் தெரியும். இப்படி இருந்தால் தினமும் அவர்கள் வருவார்கள் என்ற வாசகத்துடன் காணொளி திங்களன்று @bckupacc99 பயனரால் X இல் பகிரப்பட்டது.

40,000 பார்வைகளைப் பெற்ற அந்த வீடியோவில், தாத்தா தனது பேரக்குழந்தைகளுடன் ‘ரயிலில்’ பயணம் செய்வதைக் காட்டுகிறது. எளிமையான முற்றத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட இரயில்வே மறுபயன்பாடு செய்யப்பட்ட பொருட்களால் ஆனது போல் தெரிகிறது. இந்த ரயில் குழந்தைகளை மட்டுமின்றி பெற்றோரையும் கவரும் என்று கூறி நெட்டிசன்கள் மகிழ்ந்தனர்.

காத்திருங்கள். இதை என் தந்தைக்கு இதனை அனுப்புகிறேன். அவர் தனது பேரக்குழந்தைகளுக்காக இதைச் செய்வார் என்று எனக்கு தெரியும். பிறகு நானும் சேர்ந்து சவாரி செய்யலாம் என்கிறார் @wan_asra பயனர். பேரக்குழந்தைகள் மட்டுமல்ல, நான் கூட தினமும் என் சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறேன் என்று @ akuhavoc_ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here