ஷா ஆலம்:
இந்தியப் பயணத்தில் மஇகாவுக்கும் எனக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னுரிமை வழங்கியது பெருமையளித்தது என்று கட்சி தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
டத்தோஸ்ரீ அன்வார் அண்மையில் புதுடில்லிக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார்.
இப் பயணத்தின் போது அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இந்தப் பயணத்தின் போது மஇகாவுக்கும் அதன் தலைவராக எனக்கும் முன்னுரிமை வழங்கி புதுடில்லிக்கு பிரதமர் அழைத்துச் சென்றார்.
இந்த அஙகிகாரத்திற்கும் பிரதமருக்கும் மஇகா நன்றி தெரிவித்துக்கொள்வதாக இன்று நடைபெற்ற கட்சி பொதுப் பேரவையில் உரையாற்றிய விக்னேஸ்வரன் கூறினார்.