கிடங்கில் இருந்து 10 சொகுசு கார்களை பறிமுதல் செய்த சரவாக் சுங்கத்துறையினர்

கூச்சிங் மாநிலத்தின் ஒரு கிடங்கில் இருந்து 8,129,825 ரிங்கிட் மதிப்புள்ள 10 சொகுசு வாகனங்களை சுங்கத் துறையினர் செப்டம்பர் 2ஆம் தேதி பறிமுதல் செய்தனர். சரவாக் சுங்கத்துறை இயக்குநர் நோரிசான் யாஹ்யா, வாகனங்கள் வரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், உரிமம் இல்லாத கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த வழக்கு சுங்கச் சட்டம் 1967 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகளுக்கு 50,000 ரிங்கிட்  வரை அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here