ஷா ஆலம்:
வெளியில் இருந்து பார்த்த போதுதான் மஇகா – வின் வலிமையையும் அருமையையும் புரிந்துக்கொண்டதாக அண்மையில் மீண்டும் கட்சிக்கு திரும்பிய டத்தோ சிவராஜ் சந்திரன் கூறினார்.
2004 ஆம் ஆண்டில் கட்சியில் ஒரு கிளைத் தலைவராக இணைந்து தேசிய இளைஞர் பிரிவு தலைவராக, தேசிய உதவி தலைவராக படிப்படியாக உயர்ந்ததை அவர் சூட்டிக் காட்டினார்.
இந்திய சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காணக் கூடிய ஒரே கட்சி மஇகா தான் என்ற உண்மையை சிவராஜ் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.