ஷா ஆலம்:
ஷா ஆலம், ஐடிடிசி மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற மஇகாவின் 78ஆவது பொதுப் பேரவையில் இருவருக்கு மனித நேய விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மருத்துவர் டத்தோ டாக்டர் அஸ்ரி ரங்கா அப்துல்லா ராமையா, அரசியலா ஆர்வளர் டத்தோ எம்.பெரியசாமி ஆகிய இருவருக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
பொதுப் பேரவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க வந்த தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி இந்த விருதுகளை எடுத்து வழங்கினார்.
கட்சி தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் விருது பெற்ற இருவருக்கும் சிறப்பு செய்தார். தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் உடன் இருந்தார்.