தங்களுடன் இணையாதவர்களை பலவீனப்படுத்த சமயம் மற்றும் இனப் பிரச்சினைகளை தொடர்ந்து கையாளுவது கண்டிக்கத்தக்கது

புத்ராஜெயா: தங்களுடன் இணையாதவர்களை பலவீனப்படுத்த சமயம் மற்றும் இனப் பிரச்சினைகளை தொடர்ந்து கையாளும் கட்சிகளை டத்தோ டாக்டர் முகமட் நயிம் மொக்தார் கண்டித்தார். இது போன்ற செயல்கள் பொறுப்பற்ற செயல் என பிரதமர் துறை அமைச்சர் (சமய விவகாரங்கள்) குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாம் அனுசரிக்கும் இந்த தேசிய அளவிலான மௌலிதுர் ரசூல் கொண்டாட்டமானது முஹம்மது நபியின் போதனைகளை அறிவு மற்றும் ஞானத்தின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் பாராட்டுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் பெரும் அர்த்தத்தைத் தருகிறது.

நபியின் தீர்க்கதரிசன பண்புகளில் சித்திக் (உண்மை), நேர்மை, தப்லீக் (தெரிவித்தல்) மற்றும் ஃபடோனா (ஞானம்) ஆகியவை அல்-ஃபலாவை உண்மையான முஸ்லிமாக இருப்பதற்கான  இன்றியமையாத மதிப்புகளாகும் என்று அவர் தனது உரையின் போது கூறினார். மௌலிதுர் ரசூல் 2024/1446H கொண்டாட்டம் திங்கள்கிழமை (செப்டம்பர் 16) நடைபெற்றது.

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பிறப்பை நினைவு கூறும் வகையில் “அல்-ஃபலாஹ் பெமாகு மலேசியா மடானி” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாமன்னர் தம்பதியர், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நாட்டின் கலாச்சார, இன மற்றும் மத பன்முகத்தன்மையின் தனித்துவத்தைப் பாராட்டுவதில் மலேசியாவுக்கு அதன் சொந்த “திசைகாட்டி” உள்ளது என்று முகமட் நயிம் கூறினார்.ம்கூட்டாட்சி அரசியலமைப்பு மற்றும் ருக்குன் நெகாராவில் வேரூன்றிய பன்மைத்துவத்தில் ஒற்றுமை உணர்வு, தேசபக்தி, சகிப்புத்தன்மை மற்றும் பொறுப்பான ஒரு தேசிய அடையாளத்தை வடிவமைக்கும் என்று அவர் வலியுறுத்தினார். மடானி மலேசியாவின் முக்கிய மதிப்பான சமூகத்தின் நல்வாழ்வை வலுப்படுத்த இது அவசியம் என்று அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here