லங்காவி:
கடல் கொந்தளிப்பு காரணமாக லங்காவி – கோல கெடா இடையிலான 8 ஃபெர்ரி சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
அலைகள் உயர்ந்து எழுந்த காரணத்தினால் லங்காவியில் இருந்து கோல கெடா இடையிலான 5 சேவைகள் ரத்து செய்யப்பட்டதில் 2,013 பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்று கொன்சோர்ட்டியம் ஃபெர்ரி லைன் வெஞ்சர்ஸ் தலைமை நிர்வாகி கேப்டன் பஹாரின் பஹாரோம் கூறினார்.
அதேசமயத்தில் கோல கெடாவில் இருந்து லங்காவிக்கான 3 சேவைகள் ரத்து செய்யப்பட்டதில் 937 பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்று அவர் சொன்னார்.
வானிலை இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஃபெர்ரி சேவைகள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கும் என்று பஹாரின் தெரிவித்தார்.