சிரம்பான்:
சிரம்பானில் சிறார்களை காம இச்சையுடன் நெருங்கியதாக GISBH என்ற குளோபல் இக்வான் சர்வீசஸ், பிஸ்னஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மீது சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
நீதிபதி சுரித்தா புடின் முன்னிலையில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட போது 21 வயது ஹபிப் நோ ஸைரி, 20 வயது குனாய்ஸ் ஃபாத்தி கபில், 22 வயது அமாட் நட்ஸ்ஃபுல் இஷாம் அஸிஸான் ஆகிய அம்மூவரும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினர்.
கோலப் பிலாவில் உள்ள ஒரு சமயப் பள்ளியில் இக்குற்றச் செயலை புரிந்ததாக இவர்கள் மீது 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
காம உறவில் ஈடுபடும் நோக்கத்துடன் இச்சிறார்களின் உடலை தொட்டனர் என்பது குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.
குற்றம் நிருபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரையிலான சிறை, பிரம்படி தண்டனை விதிக்கப்படும்.