15ஆவது ஆண்டாக உலகின் சிறந்த பட்ஜெட் விமான நிறுவனமாக ஏர் ஆசியா தேர்வு

ஸ்கைட்ராக்ஸின் (Skytrax) 2024 உலக ஏர்லைன் விருதுகளில், தொடர்ந்து 15 ஆவது ஆண்டாக ஏர் ஆசியா உலகின் சிறந்த குறைந்த கட்டண விமான நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 31ஆவது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறி, உலகின் சிறந்த விமான நிறுவனங்களில் 30ஆவது இடத்தையும் பிடித்தது.

Capital A Bhd இன் தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ், விமான நிறுவனத்திற்கு வாக்களித்த பயணிகளுக்கு நன்றி தெரிவித்து, தொடர்ந்து 15ஆவது ஆண்டாக சிறந்த தரம் மற்றும் சிறப்பை வழங்குவதற்கான முயற்சிகளை அங்கீகரித்தார். இதுபோன்ற வெற்றிப் பாதையை அடைந்த வேறு எந்த நிறுவனங்களும் என் நினைவுக்கு வரவில்லை. நாங்கள் அதைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம்.

இதைச் செய்ய அயராது உழைத்த எங்களின் அனைத்து நட்சத்திரங்களுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறோம். மேலும் AirAsia அனுபவித்த ஏற்ற தாழ்வுகளின் மூலம் எங்களுக்கு விசுவாசமாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று அவர் சமீபத்தில் Skytrax இடம் கூறினார்.

கடந்த ஆண்டு 47ஆவது இடத்தில் இருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் இந்த ஆண்டு 39வது இடத்தில் உள்ளது. கத்தார் ஏர்வேஸ் உலகின் சிறந்த விமான நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் எமிரேட்ஸ் உள்ளன. உலகின் சிறந்த  விமான நிறுவனங்களின் பட்டியலில் பேங்காக் ஏர்வேஸ் முதலிடத்திலும், ஏஜியன் ஏர்லைன்ஸ் மற்றும் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. 1999 ஆம் ஆண்டு ஸ்கைட்ராக்ஸ் தனது முதல் உலகளாவிய வருடாந்திர வாடிக்கையாளர் திருப்திக் கணக்கெடுப்பைத் தொடங்கியபோது வேர்ல்ட் ஏர்லைன் விருதுகள் தொடங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here