அறுவை சிகிச்சை செய்து, கட்டியை அகற்ற வேண்டும் என, சிகிச்சை மைய ஊழியர்கள் கூறினர்.நேற்று காலை அறுவை சிகிச்சைக்காக, ஒரு அறைக்கு முகமது மசின் அழைத்துச் செல்லப்பட்டார். அரைமணி நேரத்தில் அறுவை சிகிச்சை முடிந்து விடும் என்று கூறினர்.
ஆனால் மாலை ஆன பின்னரும், அறுவைச்சிகிச்சை அறையில் இருந்து முகமது மசினை அழைத்து வரவில்லை. சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், அறுவை சிகிச்சை மைய ஊழியர்களிடம் விசாரித்தபோது, முகமது மசின் உடல்நிலை ஏற்ற, இறக்கமாக இருப்பதாகவும், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படியும் கூறினர்.
அதன்படி அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். முக அறுவை சிகிச்சை மையம் மீது, கத்ரி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.