அலோர் ஸ்டார்:
கோத்தா ஸ்டாரில் உள்ள ஏழு தற்காலிக நிவாரண மையங்கள் இன்று கட்டம் கட்டங்களாக மூடப்பட்டன, இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 4 மணி நிலவரப்படி, கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 888 ஆகக் குறைந்துள்ளது.
இது இன்று காலை 1,885 பேராக இருந்தது.
சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் அறிக்கையின்படி, 252 குடும்பங்களைச் சேர்ந்த அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் பெந்தோங் மற்றும் போக்கோக் சேனாவில் உள்ள 11 நிவாரண மையங்களில் இன்னும் தங்கியுள்ளனர்.