கோல திரெங்கானு:
குடிநுழைவுத் துறையினர் நேற்று நடத்திய ஓப்ஸ் கெகர் நடவடிக்கையில் முறையான பயண ஆவணங்கள் எதுவுமற்ற பதினேழு தாய்லாந்து நாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கோல திரெங்கானுவில் பொழுதுபோக்கு மையமாக செயல்படுவதாக நம்பப்படும் ஒரு உணவகத்தில் குறித்த 19 முதல் 33 வயதுக்குட்பட்ட பெண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக திரெங்கானு குடிநுழைவு துரையின் துணை இயக்குநர் (கட்டுப்பாடு) மாட் அமின் ஹாசன் தெரிவித்தார்.
பொதுமக்களின் புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த நடவடிக்கையின் போது வாடிக்கையாளர்கள் உட்பட மொத்தம் 52 நபர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். இதில் சில வெளிநாட்டு பெண்கள் பின் கதவு வழியாக தப்பிக்க முயன்றனர், ஆனால் அமலாக்க அதிகாரிகள் அந்த வளாகத்தை சுற்றி வளைத்ததால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை ,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.