‘ராஜா மாதிரி இருந்தான்…’ ஜெயம் ரவி குறித்து அவரது தந்தை மோகன் வருத்தம்

டிகர் ஜெயம் ரவியின் தந்தையும், தயாரிப்பாளருமான எடிட்டர் மோகன், “தன்னுடைய மகன் ஜெயம் ரவி ராஜா மாதிரி இருந்தான்” என்று வருத்தமாகப் பேசியுள்ளார். மேலும், தனது மூத்த மகன் ராஜா குறித்தும் பேசியுள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவெடுத்து விவாகரத்தை அறிவித்துள்ளார் என்று அவரது மனைவி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டதையடுத்து ஜெயம் ரவி – ஆர்த்தி குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ஜெயம் ரவி, ஜெயம், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, பேராண்மை, பூலோகம், தனி ஒருவன் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி காதல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு அயன் மற்றும் ஆரவ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த சூழலில், ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விட்டுப் பிரிவதாக கடந்த 9-ம் தேதி அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன் என்றும், இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்.

நடிகர் ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த அவருடைய மனைவி ஆர்த்தி ரவி, இது அவர் தன்னை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வெடுத்த முடிவு என்று அறிக்கை வெளியிட்டார். அதில், “இது என் கவனத்துக்கு வராமலும் என் ஒப்புதல் இல்லாமலும் எடுக்கப்பட்ட முடிவு” என்றும், “திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே” என்றும், “தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல” என்றும் ஆர்த்தி கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, நடிகர் ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதற்கு, கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து, சென்னை ஈ.சி.ஆர் சாலை ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத் தரக்கோரி ஜெயம் ரவி அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) புகார் அளித்தார்.

இதனிடையே, தனது குடும்ப வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசிய ஜெயம் ரவி, “தனது மனைவி ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்தாலும் முதல் 10 வருடங்கள் தங்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், மூன்று வருடங்கள் நான் நிம்மதி இல்லாமல் இருந்தேன். எனக்கு அந்த வீட்டில் சரியான மரியாதை கிடையாது. என்னுடைய பெயரில் சொந்தமாக ஒரு பேங்க் அக்கவுண்ட் கூட கிடையாது. செலவுக்கு நான் என்னுடைய மனைவியிடம் தான் பணம் வாங்குவேன். என்னுடைய வரவு செலவு எல்லாவற்றையும் என்னுடைய மனைவிதான் பார்த்துக் கொண்டிருந்தார். நான் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் வீட்டை விட்டு வெளியே போகும்போது என் கையில் பணம் இல்லாமல் தான் காரை மட்டும் எடுத்துக்கொண்டு போனேன்” என்று கூறியது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி இதையெல்லாம் மறுத்து இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவியின் தந்தையும், தயாரிப்பாளருமான மோகன் ராஜா, “தன்னுடைய மகன் செய்த தப்பு இதுதான். அதனால் மூன்று வருடம் வீணாக போய்விட்டது என்று வருத்தமாக பேசியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here