கோலாலம்பூர்:
SKSSR எனப்படும் இல்லத்தரசிகள் சமுக பாதுகாப்பு திட்டத்தில் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த 20 குடும்ப மாதர்கள் பதித்துக்கொண்டனர்.
இவர்களுக்கான சந்தாப் பணத்தை தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் நடராஜன் செலுத்தினார். பெர்கேசோவின் இத்திட்டம் குறித்து அவர்களுக்கு டாக்டர் சத்திய பிரகாஷ் விளக்கம் அளித்தார்.
வீட்டில் நிகழக்கூடிய விபத்துகளுக்கு மருத்துவ செலவுகள் உட்பட இழப்பீடும் வழங்கி இல்லத்தரசிகளுக்கு இத்திட்டம் உரிய பாதுகாப்பு வழங்குகிறது என்று அவர் சொன்னார்.
இத்திட்டத்தில் இன்னும் பதிந்துகொள்ளாமல் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு முதல் கட்டமாக தாம் இந்த உதவியை செய்தாக டாக்டர் சத்திய பிரகாஷ் கூறினார்.