அலோர் ஸ்டார்:
இன்று காலை 7.30 மணி நிலவரப்படி, மூன்று மாவட்டங்களில் உள்ள ஐந்து தற்காலிக நிவாரண மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 161 குடும்பங்களைச் சேர்ந்த 463 பேராக அதிகரித்துள்ளது.
நேற்று 5 மணியளவில் பதிவாகிய குபாங் பாசு மற்றும் பாடாங் தேராப் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 164 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.










