புதுடில்லி :
பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு (74) இந்திய சினிமாவின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் மிதுன் சக்கரவர்த்தி. மிர்கயா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திற்கே சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.
தொடர்ந்து பாலிவுட்டில் பல வெற்றி படங்களில் நடித்தார். குறிப்பாக இவரின் ‛டிஸ்கோ டான்சர்’ படம் ஹிந்தி சினிமாவை தாண்டி இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் பிரபலமானது. குறிப்பாக அந்த படத்தில் வரும் ‛ஐ யம் ஏ டிஸ்கோ டான்சர்’ பாடல் இந்திய அளவில் பிரபலமானது.