நாட்டில் மூத்த குடிமக்களுக்கு ஒவ்வொரு மாதமும் 500 ரிங்கிட் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று கோரும் மகஜரை பிஎஸ்எம் எனப்படும் பார்ட்டி சோஷியலிஸ் மலேசியா இன்று காலை புத்ரா ஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பித்தது.
இம்மாதம் நாடாளுமன்ற மக்களவையில் சமர்ப்பிக்கப்பட இருக்கும் 2025 பட்ஜெட்டில் பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மூத்தப் பிரஜைகளுக்கான இந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று அம்மகஜரில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தேவராஜ் கூறினார்.