மைடினின் பிரகாச ஒளி என்ற தீபாவளி கருப்பொருளுடன் 200 பேருக்கு தீபாவளி அன்பளிப்பு

­துன்பங்களை நீக்கி இன்பத்தைத் தரும் தீபத் திருநாளான தீபாவளி நம் நாட்டில் கொண்டாப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும் தீபாவளி. தீபத் திருநாளை வசதி குறைந்தவர்களுக்கும் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில்  மைடின் பேரங்காடி வருடந்தோறும் வசதி குறைந்தவர்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கி வருகிறது என்று நிர்வாக இயக்குநர் அஹிம்மாட் பின் மைடின் தெரிவித்தார்.

இந்தாண்டு பிரகாச ஒளி என்ற கருப்பொருளுடம் இந்தாண்டு மைடின் பேரங்காடி சிலாங்கூரில் வசிக்கும் வசதி குறைந்த 200 குடும்பங்களுக்கு 200 ரிங்கிட் மதிப்பிலான உணவுப் பொருட்களை வழங்கியது.  பல்லினமக்கள் வாழும் நம் நாட்டில் இன மதம் பாராமல் அனைவரும் சகோதரத்துவத்துடன் பழகி வருகிறோம்.

மேலும் இவ்வாண்டு தீபாவளி எஸ்எம்எஸ் டீன் ஜூவல்லரி மைடினுடன் இணைந்து 120,000 ரிங்கிட்  மதிப்பிலான  அதிர்ஷட குலுக்கலையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மைடினில் 150 ரிங்கிட்டிற்கு (ஒரே ரசீது) பொருட்களை வாங்குவதோடு எஸ்எம்எஸ் டீன் ஜூவல்லரியில் குறைந்தது 1,500 ரிங்கிட்டிற்கு நகைகள் வாங்குவதன் வழி இந்த அதிர்ஷட  குலுக்கலில் பங்கேற்கலாம்.  மேலும் தீபாவளியை முன்னிட்டு மைடின் பேரங்காடியின் பாம்பே பஜார் உள்ளிட்ட பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here