ஷாங்காய் நகரில் கத்திக்குத்து தாக்குதல்; மூவர் மரணம், 15 பேர் காயம்

பெய்ஜிங்: சீனாவின் ஷாங்காய் நகரில் செப்டம்பர் 30ஆம் தேதியன்று பேராங்காடி ஒன்றில் ஆடவர் ஒருவர் அங்கிருந்த பலரைக் கத்தியால் தாக்கினார்.

இதில் மூன்று பேர் மாண்டதாகவும் 15 பேர் காயமடைந்ததாகவும் சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான சிங்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

2024ஆம் ஆண்டில் சீனாவில் உள்ள பல பகுதிகளில் இதுபோன்ற பல தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.

ஷாங்காய் பேரங்காடியில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்தோர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.மற்ற 15 பேரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தாக்குதல் நடத்திய 37 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நிதி தொடர்பான பிரச்சினை காரணமாக கோபமடைந்த அந்த ஆடவர் இத்தாக்குதலை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here