தலைநகர் காத்மண்டுவில் 200-க்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கிக் கொண்டனர்.
நேபாளம் முழுவதும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 150-ஐ நெருங்கியது.
பல நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் சீர்குலைந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.
இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 29 பேரை காணவில்லை என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாயமானோரை தேடும் பணியும் நடந்து வருகிறது. மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.