இந்த விருது விழாவில் இந்தி, தெலுங்கு, தமிழ் திரையுலகின் பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அழைப்பின் பேரில் நடிகை மீனாவும் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் மீனாவை பேச அழைத்தனர். அப்போது செய்தியாளர்களில் ஒருவர் அவரிடம் “இந்தியில் பேசுங்கள்” என்றார். அதைக்கேட்டு கடுப்பான மீனா, “இது இந்தி விழாவா? இந்தியில்தான் பேச வேண்டுமா? அதுக்கு எதுக்கு என்னை கூப்பிட்டீங்க?
தென்னிந்தியர்கள் மட்டும் தான் இங்கே வருகிறார்கள் என நினைத்தேன். தென்னிந்திய படங்கள் சிறப்பாக இருக்கின்றன. தென்னிந்தியராக இருப்பதில் பெருமை படுகிறேன்” என மீனா பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.