கோலாலம்பூர்:
2040-ஆம் ஆண்டுக்குள் மலேசியாவில் புற்றுநோயியல் நிபுணர்களின் எண்ணிக்கை 400-ஆக உயர்த்த சுகாதார அமைச்சகம் இலக்கு கொண்டுள்ளது என்று அதன் அமைச்சர் டாக்டர் ஜுல்கிஃப்லி அமாட் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் பணியிலுள்ள புற்றுநோயியல் நிபுணர்களின் எண்ணிக்கை மொத்தம் 175-ஆக உள்ளது.
இந்த எண்ணிக்கை 2040-ஆம் ஆண்டு 400 ஆக உயரர்த்துவதற்கு உரிய நடவடிக்கையை அமைச்சகம் முன்னெடுப்பதாக அவர் சொன்னார்.
இந்த இலக்கை அடைவதற்கு மருத்துவப் புற்றுநோயியல் துறையில் ராயல் காலேஜ் ஆஃப் ரேடியலஜிஸ்ட்ஸ் (FRCR) பெல்லோஷிப்பில் மலேசியாவின் பங்கேளிப்பு முக்கியம் என்று அவர் சொன்னார்.
மேலும் தேசியப் புற்றுநோயியல் மையத்தின் FRCR திட்டத்தில் சிறந்து விளங்கும் மையமாக இது தொடர்ந்து செயல்படும் என்றார் அவர்.