6 வயது மகளை கொலை செய்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தாய் மாரியம்மா

சிரம்பானில் ஆறு வயது மகளைக் கொன்ற வழக்கில் தனித்து வாழும் தாயை விடுவித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 39 வயதான மாரியம்மாவுக்கு எதிராக அரசுத் தரப்பு வழக்குத் தொடரத் தவறியதைக் கண்டறிந்த நீதிபதி ரோஹானி இஸ்மாயில் அந்த பெண்ணை விடுவிக்க உத்தரவிட்டார்.  சாட்சியங்களின் கூற்று இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து ஆதாரங்களின் விரிவான மதிப்பீட்டின் அடிப்படையில், முதன்மையான வழக்கை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்பதை நான் காண்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என்றும் அவர் தற்காப்பு வாதத்தில் நுழையாமல் விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

செப்டம்பர் 5, 2020 அன்று மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை  சிரம்பான்  ஜாலான் பெர்சியாரன் செனவாங் 8, அபார்ட்மென்ட் மாதாஹரி ஹைட் என்ற குடியிருப்பில் இருந்து தனது மகளைக் கொன்றதாக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் மரியம்மா மீது குற்றம் சாட்டப்பட்டது. அரசுத் தரப்பு வழக்குரைஞர் சியாமிமி பர்ஹானா எம்.ஏ. அஸீஸ் ஆகியோரும் வழக்கறிஞர்கள் எஸ் பால் கிருஷ்ணராஜா, எமி சோங் ஆகியோர் மரியம்மா தரப்பிலும் வாதாடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here