ஆறு மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை – மலேசிய வானிலை ஆய்வு மையம்

கோலாலம்பூர்:

தீபகற்ப மலேசியாவின் ஆறு மாநிலங்களில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வானிலை சரவாக்கின் கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், சரிகேய், சிபு, மூக்கா, பிந்துலு மற்றும் மிரி ஆகிய பகுதிகளும் எதிர்கொள்ளும் என்று மெட்மலேசியா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த வானிலையை எதிர்கொள்ளும் மற்ற மாநிலங்களாக கெடா (சிக், பாலிங் மற்றும் கூலிம்) உலு பேராக் (பேராக்); மச்சாங், கோலக்கிராய் மற்றும் குவா மூசாங் (கிளந்தான்); உலு திரெங்கானு, டுங்கூன் மற்றும் கேமாமன்(திரெங்கானு) அத்துடன் ஜெரான்துட் மற்றும் குவந்தான் (பகாங்) ஆகியனவும் அடங்கும்.

இடியுடன் கூடிய மழையின் அறிகுறி காரணாமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், மழையின் தீவிரம் ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டருக்கும் அதிகமாக இருக்கும் என்றும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடிக்கும் என்றும் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here