இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் புற்றுநோய் மரணங்கள்- எச்சரிக்கும் ஐ.சி.எம்.ஆர்.

இந்தியாவில் வரும் 2045 க்குள் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிக்கும் என்று தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகமான ஐசிஎம்ஆர் [ICMR] எச்சரித்துள்ளது. BRICS நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் தாக்கம் குறித்த ஆய்வானது நடத்தப்பட்டது.

ஐசிஎம்ஆர் நடத்திய இந்த ஆய்வின்படி , 2022 மற்றும் 2045க்கு இடையில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் கடுமையாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை நடத்திய 5 பேர் கொண்ட குழு, இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பு 12.8% அதிகரித்துள்ளதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள் அதிகம் உட்கொள்ளப்படுவதால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்புகளைக் குறைக்க முதற்கட்டமாக சுகாதார காரணிகளை மேம்படுத்தவேண்டும் என்று கூறப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here