துரத்திய நாய் – நிலைதடுமாறி மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த வாலிபர்

சமீப காலமாக தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் கடித்ததில் பலர் காயம் அடைந்துள்ளனர். குறிப்பாக சிறுவர்கள் தான் அதிகம் காயமுற்றுள்ளனர். இந்த நிலையில், நாயை விரட்டி சென்ற வாலிபர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவை பார்ப்போரை பதற வைக்கிறது.

53 வினாடிகளே இந்த வீடியோ ஓடுகிறது. விவி பிரைட் ஹோட்டலின் மூன்றாவது மாடியை இந்த வீடியோ காட்டுகிறது. அதில் ஒரு நாய் ஒன்று உலாவுகிறது. அப்போது 24 வயதான உதய்குமார் என்ற வாலிபர் அங்கு வருகிறார். அப்போது அவர் நாயை பார்த்து துரத்திக் கொண்டு செல்கிறார்.

சில நிமிடங்களில் அந்த நாய் சென்ற இடத்திற்கு மீண்டும் ஓடி வருகிறது. அதனை துரத்திக்கொண்டு ஓடி வரும் உதய், மாடியின் ஜன்னல் அருகே வரும் போது நிலை தடுமாறியதால் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். உதய் கீழே விழுந்து உயிரிழந்தது குறித்து அறிந்ததும் அங்கிருந்தவர்கள் செய்வதறியாதது அங்கும் இங்கும் அலையும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார்  ஹோட்டலில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here