கிள்ளான்:
கிள்ளானின் தாமான் செந்தோசாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால், எட்டு வயது சிறுமி உட்பட 3 பேர் புகை மூட்டத்தால் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டனர்.
இன்று வெள்ளிக்கிழமை (அக் 25) அதிகாலை 2.58 மணிக்கு குறித்த சம்பவம் தொடர்பான பேரிடர் அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குநர் அமாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
உடனே அண்டலாஸ் தீயணைப்பு நிலையத்தில் இருந்து மொத்தம் 15 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என்றும், பாதிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் தீ சம்பவம் நிகழ்ந்தது கண்டறியப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குறித்த வீட்டுப்பிரிவு 20 விழுக்காடு எரிந்தது, குறித்த வீட்டில் ஒரு ஆணும் 30 வயதுடைய ஒரு பெண்ணும், எட்டு வயது சிறுமியும் ஒரு அறையில் சிக்கிக் கொண்டனர், “அவர்கள் புகையை உள்ளிழுத்ததால் மூச்ச்சு விட சிரமப்பட்டனர் என்றும், முதலுதவிக்கு பின்னர் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சுகாதார அமைச்சக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.