பி.ஆர்.ராஜன்
இணையதள பகடிவதை என்பது இன்று மிகப் பரவலாக பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இண்டர்நெட் பயனீட்டாளர்கள் பொறுப்புடன் நடந்துகொண்டால் மட்டுமே இந்தக் கொடிய சமூகப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று எம்சிஎம்சி எனப்படும் மலேசிய பல்லூடக தகவல் ஆணையத்தின் தலைமை சட்ட ஆலோசனை அதிகாரி எல்.எஸ். லேனர்ட் கூறினார்.
இணையதள பகடிவதை, அதன் தாக்கம், சட்டநடவடிக்கைகள் குறித்து லேனர்ட்டுடன் மக்கள் ஒசை அண்மையில் ஒரு நேர்காணலை நடத்தியது. இணையதள பகடிவதை குறித்து புகார்கள் பெறும் பட்சத்தில் எம்சிஎம்சி சில நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும். அதில் ஒன்று புகாரின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்வது. பகடிவதை நிகழ்ந்திருப்பதற்கான அம்சங்கள் மற்றும் இதர குற்ற அம்சங்கள் உள்ளனவா என்பது மதிப்பீடு செய்யப்படும்.
பகடிவதை நிகழ்ந்திருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட சேவை வழங்கும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு சமூக வழிகாட்டி அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தீர்வு காணும்படி அறிவுறுத்துவோம். எங்களது இந்தப் பரிந்துரையை மதிப்பீடு செய்து, மலேசிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனம் நடவடிக்கை எடுக்கும். அதில் பகடிவதை சம்பந்தப்பட்ட நபரின் கணக்கை இடைநீக்கம் செய்வது. உள்ளடக்கங்களை நீக்குவது போன்றவை அடங்கும்.
இதுதவிர அமலாக்க அதிகாரத்தை எம்சிஎம்சி கொண்டிருக்கிறது. அவ்வகையில், பகடிவதை அம்சங்களை உருவாக்கியவரிடம் புலன்விசாரணை நடத்துவது, முதல்கட்ட அறிக்கை (FIR) தயாரிப்பது, நீதிமன்றத்தில் குற்றம்சாட்டுவது மற்றும் நடவடிக்கை எடுப்பது ஆகியவை அடங்கும்.
இணையதள பகடிவதையைப் பொறுத்தவரை உடனடியாகத் தீர்வு காண்பதற்குரிய குறிப்பிடத்தக்க சட்டவிதிகள் தொடர்பு பல்லூடக் சட்டத்தில் இல்லை. இது பகடிவதைக் குற்றம் என்பதை வகைப்படுத்துவதற்குரிய சட்ட விதிகளும் இல்லை. இணையதளத்தைப் பயன்படுத்துவதை வகைப்படுத்தும் தொடர்பு. தகவல் பல்லூடகச் சட்டம் பிரிவு 233 மட்டுமே உ இணையதளச் சேவைகளை முறையற்ற வழியில் பயன்படுத்துவதைத் உள்ளது. தடுப்பதற்கு இந்தச் சட்டப்பிரிவின் கீழ்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொந்தரவு செய்வது என்பது பகடிவதைக்கு இட்டுச் செல்லும் புகார்கள் மீது இந்த சட்டப் பிரிவின் கீழ்தான் விசாரணை நடத்தப்படும்.
கே: தொந்தரவு என்பது என்ன? இதற்கு தெளிவான விளக்கம் சொல்ல முடியுமா?
ப: தீய நோக்கத்துடன் மிரட்டல், அச்சுறுத்தும் தோரணை, ஆபாசம், அநாகரிகம், பொய்த்தகவல், அவமதிப்பு, மனத்தைக் காயப்படுத்துதல் ஆகியவை தொந்தரவுப் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றை நோக்கமாகக் கொண்டு உள்ளடக்கங்களை உருவாக்கிப் பகிர்வது போன்றவையும் தொந்தரவு என்று சொல்லப்படுகிறது.
இது ஒரு குற்றச்செயலாகும். நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டால் 50,000 ரிங்கிட் அபராதம், ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். அதேசமயத்தில், இக்குற்றச் செயல் தொடர்ந்தால், நாளொன்றுக்கு 1,000 ரிங்கிட் அபராதம் விதிப்பதற்கும் சட்டம் வகை செய்கிறது. இந்தக் குற்ற அம்சங்களை உள்ளடக்கிய தகவல்களைப் பகிர்வதும் ஒரு குற்றச்செயல்தான்.
கே: ஒரு வழக்கறிஞராக 22 ஆண்டுகள் அனுபவத்தில் நீங்கள் இணையதள பகடிவதையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ப: வழக்கறிஞர் தொழில் கோணத்திலிருந்து பார்க்கும்போது, தற்போது நிகழ்ந்து வரும் இணையதள முறியடிப்பதற்கும் உடனடி நடவடிக்கை தேவை. சட்டத்தை அமல்படுத்தும் பகடிவதைச் சம்பவங்களைத் தடுப்பதற்கும் தரப்பினர் இதில் தீவிரமாக ஈடுபாடு காட்ட வேண்டும். இப்பிரச்சினையை முழுமையாகக் கட்டுப்படுத்தத் தவறினால், சில காலத்திற்குப் பிறகு மிகப் பெரிய பிரச்சினையை,சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இண்டர்நெட்டில் ஒரு தகவலை உருவாக்கி வெளியிடுவது என்பது மிக சுலபமான காரியம்தான். ஆனால் அதில் ஒரு பொறுப்புணர்வு இருக்க வேண்டும். சட்டம் என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, இண்டர்நெட்பயனர்கள் செயல்படுவது ஓர் ஆரோக்கியமான செயலாக இருக்கும்.
ஆன்லைனில் விருப்பம்போல் ஓர் உள்ளடக்கத்தைப் பதிவேற்றம் செய்யும் உரிமை யாருக்கும் இல்லை. கண்மூடித்தனமாகச் செயல்படக் கூடாது. இண்டர்நெட் பயன்பாட்டை மிக நாகரிகமாக, மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதாக வைத்திருக்க வேண்டியது, அனைத்துப் பயனர்களின் தார்மீகக் கடமையும் பொறுப்புடைமையும் ஆகும்.
நான்கு ஆண்டுகளுக்கு முன், சமூக ஊடகப் பயன்பாடு இப்போதுபோல் அவ்வளவு தீவிரமாக இல்லை. பலருக்கு இதுபற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. காலப்போக்கில், சமூக ஊடகங்கள் பயன்பாடு கட்டுக்கடங்காத அளவுக்கு அதிகரித்தது. அரசியல், சமூக நடவடிக்கைகள் அதிக இடம்பிடித்தன. இண்டர்நெட் உலகமே தலைகீழாக மாறியது.
இந்நிலையில், இணையதளத்தைப் பயன்படுத்துவோர் பொறுப்பும் கடமையும் உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே, இணையதள பகடிவதைகளுக்கும் இதர குற்ற அம்சங்கள் உள்ள விவகாரங்களுக்கும் ஆக்கப்பூர்வமாக தீர்வு காணமுடியும் என்று லேனர்ட் குறிப்பிட்டார். பாதிக்கப்படுவோர் புகார் செய்ய:// aduan.mcmc.gov.my/