சுங்கை பட்டாணி:
சுங்கை பாசிரில் உள்ள தாமான் செமராக்கில் உள்ள வீட்டில் நேற்று (நவ. 3) குழவி கொட்டியதில் இல்லத்தரசி ஒருவர் உயிரிழந்தார்.
குழவிக் கொட்டுக்கு உள்ளான 61 வயதான பெண், சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார் என்று கோல முடா மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் வான் அசாருதீன் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
“நேற்றிரவு இரவு 8 மணியளவில், பாதிக்கப்பட்டவரின் மகன் வீட்டிற்கு வந்தபோது, தனது தாயாருக்கு குழவி குத்தியதாகவும், அவர் வலியுடன் இருப்பதைக் கண்டார், உடனே பாதிக்கப்பட்டவரின் மகன் அவசர உதவி கோரியதாகவும், மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டதாகவும் ஏசிபி வான் அசாருதீன் இன்று (நவம்பர் 4) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இருப்பினும் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்சில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் குற்றச் செயல்கள் எதுவும் இல்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என அவர் மேலும் கூறினார்.