சுங்கை பூலோ:
இங்குள்ள கம்போங் பாரு சீனா சுங்கை பூலோவில் உள்ள ஜாலான் வெல்ஃபேரில் இயங்கிவந்த இரண்டு மரத்தூள் மற்றும் இரும்பு தொழிற்சாலைகள் இன்று காலை தீயில் எரிந்து நாசமானது.
காலை 6.36 மணிக்கு சம்பவம் தொடர்பாக அழைப்பு வந்தது என்று, சிலாங்கூரில் உள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அமாட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
அவரது கூற்றுப்படி, சுங்கை பூலோ, புக்கிட் ஜெலுதோங், செலாயாங் மற்றும் ரவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து மொத்தம் 29 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று, குறித்த இடத்திற்கு வந்தவுடன், அது இரண்டு மரத்தூள் மற்றும் இரும்பு தொழிற்சாலைகள் 60 விழுக்காடு எரிந்து நாசமாயின.
“தீ விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை, தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.