கோலாலம்பூர்:
சபா கெனிங்காவில் நாயைத் துன்புறுத்திக் கொலை செய்தது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளியுடன் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கார் பழுது பார்க்கும் பட்டறையில், அமைதியாக உட்கார்ந்திருந்த ஒரு நாயை ஒரு இரும்பு கம்பியின் மூலம் ஆடவர் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் நேற்று வைரலானது.
குறித்த ஆடவர் தாக்கியதில் அந்த நாய் இறந்து போனது. இந்தச் சம்பவத்தை மற்றொரு நபர் சிரித்தபடி காணொளியாக பதிவு செய்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், நாய் கொல்லப்பட்ட வழக்கு குறித்து தங்களுக்கு அறிக்கை கிடைத்துள்ளதாகவும் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் கெனிங்காவ் மாவட்ட காவல்துறை தலைவர் யம்பில் அனாக் காரை கூறினார்.